ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
 | 

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

தன்னுடைய முதல் எறிதலில் ஈட்டியை 83.46மீ தூரத்திற்கு எறிந்தார். அதன் பிறகு 2-வது முறையில், 88.06மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆனால், அதனை போட்டி நடுவர்கள் ஏற்கவில்லை. இதன் பிறகு மீண்டும் முயற்சித்த நீரஜ், தன்னுடைய கடைசி இரண்டு முறையில் 83.25மீ மற்றும் 86.26மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். 

இதன் மூலம், ஆசிய சாதனையை 1.09மீ வித்தியாசத்தில் தவறவிட்டாலும், தன்னுடைய முன்னாள் தேசிய சாதனையை (87.43மீ) நீரஜ் முறியடித்தார்.

இது தவிர, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார். 1982ம் ஆண்டு இந்தியாவின் குர்த்தேஜ் சிங் வெண்கலப் பதக்கத்தை பெற்றார். 

தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 8 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா 41 பதக்கங்களை பெற்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP