என்னுடைய சிறந்த ஆட்டத்துக்கு காரணம் தோனி- இஷான் புகழாரம்

மும்பை இந்தியன்ஸின் இஷான் கிஷான் தனது சிறந்த ஆட்டத்துக்கு தோனி, ரோஹித் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
 | 

என்னுடைய சிறந்த ஆட்டத்துக்கு காரணம் தோனி- இஷான் புகழாரம்

என்னுடைய சிறந்த ஆட்டத்துக்கு காரணம் தோனி- இஷான் புகழாரம்

மும்பை இந்தியன்ஸின் இஷான் கிஷான் தனது சிறந்த ஆட்டத்துக்கு தோனி, ரோஹித் தான் காரணம் என்று கூறியுள்ளார். 

ஐ.பி.எல்-ல் நேற்று நடந்த 41-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை மும்பை 102 ரன் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக மும்பையின் இஷான் கிஷான் விளங்கினார். 21 பந்துகளில் 62 ரன் அடித்து, மிகப்பெரிய இலக்கிற்கு வழி வகுத்தார். 

ஆட்ட-நாயகன் விருது பெற்ற இஷானை ரூ.6.2 கோடி கொடுத்து மும்பை வாங்கியது. இதனால் பலரது புருவங்கள் தூக்கப்பட்ட நிலையில், இத்தனை கோடிக்கு தான் தகுதியானவர் என்று இஷான் நிரூபித்துள்ளார். இந்த நிலையில், தன்னுடைய இந்த சிறந்த ஆட்டத்துக்கு தோனி மற்றும் ரோஹித் தான் காரணம் என்று தெரிவித்தார். 

என்னுடைய சிறந்த ஆட்டத்துக்கு காரணம் தோனி- இஷான் புகழாரம்

போட்டிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "இளம் வீரர்களுக்கு இந்த பேட்டிங் வரிசை கிடைப்பது.. அதிலும், அணி நிர்வாகம், அணியின் கேப்டன் நம்மை தோல்விகளை தாண்டி ஊக்குவிப்பது என்பது சிறப்பு" என்றார். 

இஷான் எப்போது எல்லாம் தோனியை சந்திக்கின்றாரோ, அப்போதெல்லாம் அவருக்கு பல ஆலோசனைகளை வழங்கி ஒரு நல்ல வழிகாட்டியாக தோனி இருப்பதை காணலாம். இதை நாம் மும்பை - சி.எஸ்.கே போட்டியின் போதே பார்த்திருப்போம். போட்டி முடிந்த பிறகு, இஷானுக்கு தோனி அறிவுரை கூறிய புகைப்படமும் வைரலானது.

தோனி குறித்து இஷான் கூறுகையில், "தோனி எனக்கு நிறைய உதவிகள் செய்கிறார். எப்போதெல்லாம் நான் அவரை பார்க்கிறேனோ, அவர் எனக்கு பல அறிவுரைகளை வழங்குவார். அவர் ஒரு லெஜெண்ட். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை எப்படி அதற்குள் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதை சொல்வார். தோனி மற்றும் ரோஹித் என்னை ஊக்குவிப்பார்கள். அவர்களிடம் பேசினால் நம்பிக்கை பிறக்கும்" என்று கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP