குறைந்த இலக்கை கூட எடுக்காமல் விழ்ந்தது மும்பை

Sunrisers bowl out Mumbai for 87 to get back to winning ways
 | 

குறைந்த இலக்கை கூட எடுக்காமல் விழ்ந்தது மும்பை

குறைந்த இலக்கை கூட எடுக்காமல் விழ்ந்தது மும்பைஹைதரபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குறைந்த இலக்கை கூட எடுக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்து. 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ஹைதரபாத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஹைதரபாத் அணி  18.4 ஓவர்களின் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை அணி சார்பில் மெக்லகன், ஹர்திக் பாண்ட்யா, மாயங்க் மார்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஜஸ்பிரிட் பும்ரா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

அடுத்ததாக 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரம் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அந்த அணியில் சூர்யகுமார் யாதவ்வை தவிர யாரும் 30 ரன்களுக்கு அதிகமாக எடுக்கவில்லை. ஹைதரபாத்தின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 18.5 ஓவர்களில் மும்பையின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தினர். 

ஹைதரபாத் அணியின் ஷர்துல் கவுல் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரஷித் கான் மற்றும் பசில் தம்பி தலா 2 விக்கெட்களும், சந்தீப் சர்மா, முகமது நபி மற்றும் சகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இதனால் குறைந்த இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்த 2வது அணி என்ற பெயரை மும்பை பெற்றுள்ளது. முன்னதாக 2009 ஆண்டு பஞ்சாப் அணி, சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 116 ரன்கள் எடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP