சல்மான் கான் பர்த்டே பார்ட்டியில் எம்.எஸ். தோனி!

சல்மான் கான் பர்த்டே பார்ட்டியில் எம்.எஸ். தோனி!
 | 

சல்மான் கான் பர்த்டே பார்ட்டியில் எம்.எஸ். தோனி!


மும்பையில் டிசம்பர் 26 பிரபலங்களின் மிகவும் பிஸியான நாளாக அமைந்திருக்கிறது. அதுவும் இரவு நேரத்தில் பிரபலங்களின் வரவு, மும்பை தெருக்களில் பெருமளவு ட்ராபிக்கை உண்டாக்கியது. இதற்கு எல்லாம் காரணம் ஒரே நாளில் நடந்த நட்சத்திரங்களின் கொண்டாடட்டம். 

இந்திய அணி கேப்டன் விராட்- அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு விமர்சையாக நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சிக்கு பிரபலங்களின் கூட்டம் அலை மோதியது. ஆனால், நேற்று இந்த கொண்டாட்டம் மட்டும் நடக்கவில்லை. 


பாலிவுட்டின் கான் நடிகரான சல்மான் கானின் 52-வது பிறந்தநாள் இன்று. இதனால், அவரது பிறந்தநாள் பார்ட்டியும் நேற்றிரவில் இருந்து ஆரம்பமானது. இதனால், சில நட்சத்திரங்கள் விராட்- அனுஷ்கா விழாவை முடித்த கையோடு, சல்மான் கான் பார்ட்டிக்கு விரைந்தனர். அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியும் ஒருவர். 

மனைவி சாக்ஷி, மகள் ஜிவாவுடன் விராட்- அனுஷ்கா ரிசப்ஷனுக்கு கிராண்ட் என்ட்ரி கொடுத்த தோனி, மனைவி சாக்ஷியுடன் சல்மான் கான் பார்ட்டிக்கு இரவு சென்றுள்ளார். இதனால், தோனி வழியில் ட்ராபிக் ஜாம் ஆகியதாம். சல்மான் கானுடன் தோனி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


தோனியுடன், கேதார் ஜாதவும் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். தோனியை தவிர, சல்மானின் முன்னாள் காதலி நடிகை கத்ரீனா கைஃபும், விராட்- அனுஷ்கா நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பர்த்டே பார்ட்டிக்கு வந்துள்ளார். அவரும் தோனியுடன் கலக்கலாக போட்டோ எடுத்துக் கொண்டார். 


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP