முகமது அமிருக்கு விசா கிடைத்தது; பாகிஸ்தான் அணியுடன் இணைகிறார்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இங்கிலாந்து விசா கிடைத்தை அடுத்து, அவர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தனது அணியுடன் இணையவுள்ளார்.
 | 

பாகிஸ்தான் அணி, கடந்த 15ம் தேதி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால், அணியில் மிகுந்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான அமிருக்கு இங்கிலாந்து விசா வரவில்லை. விசா தாமதமானதால் தனது அணியுடன் அவர் இணைய முடியாமல் போனது. இந்த நிலையில் அவருக்கு நேற்று இங்கிலாந்து விசா கிடைத்துள்ளதை அடுத்து, இன்று அவர் தனது அணியுடன் இணைகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர், "அமிருக்கு இங்கிலாந்து விசா கிடைத்ததை அடுத்து, இன்று அவர் பாகிஸ்தான் அணியுடன் இணைவார்" என்று தெரிவித்தார். 30 டெஸ்ட் போட்டிகளில் அமிர் 95 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

இங்கிலாந்து விசா தாமதமாவது அமிருக்கு இது முதல்முறையல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்துக்கு செல்ல இருந்த அமிருக்கு இதேபோன்ற பிரச்னை வந்தது. 2010ம் ஆண்டு அமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக தடை செய்யப்பட்டார். பின்னர் இங்கிலாந்து சிறையிலேயே அந்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டார். அமிர், நீண்ட கால  வாழ்க்கை துணைவருக்கான விசாவுக்கு இங்கிலாந்திடம்  விண்ணப்பித்துள்ளார். அமிர் இங்கிலாந்தை சேர்ந்த பெண்ணை மணந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி, முதலில் அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன் பின், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த சுற்றுப்பயணம் ஜூன் மாதம் இரண்டு டி20 போட்டியுடன் முடிவடைகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP