இறுதி போட்டியில் மேரி கோம்; வெளியேறினார் ஷிவ தபா

இறுதி போட்டியில் மேரி கோம்; வெளியேறினார் ஷிவ தபா
 | 

இறுதி போட்டியில் மேரி கோம்; வெளியேறினார் ஷிவ தபா


ஐந்து முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஓபன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதே நேரம், இந்திய வீரர்கள் ஷிவ தபா மற்றும் மனோஜ் குமார், அரையிறுதியில் தோல்வி கண்டு, வெண்கலப் புத்தகத்துடன் வெளியேறினர். 

12ம் நிலை வீராங்கனையான மேரி கோம் (48 கிலோ), மங்கோலியாவின் அல்ட்னானட்ஸ்ட்ஸெக் பட்சேய்க்ஹானை அரையிறுதியில் வீழ்த்தினார். இறுதி ஆட்டத்தில் மேரி கோம், பிலிப்பைன்ஸின் ஜோஸி கபூகோவுடன் மோதுகிறார். 

சரிதா தேவி (60 கிலோ), பிரியங்காவை தோற்கடித்தார். இதனால் இறுதிச் சுற்றில் அவர், பின்லாந்து வீராங்கனை மீரா பொட்கொனேனை எதிர்கொள்ள இருக்கிறார். இவருடன் பிங்கி ஜங்கிறா, சோனியா, சார்ஜுபாலா தேவி, ஆகியோர் இறுதி ஆட்டத்தை எட்டியுள்ளனர்.

ஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், இந்திய வீரர்கள் ஷிவ தபா (60 கிலோ) மற்றும் மஞ்சோஜ் குமார் (69 கிலோ) தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர். 

ஆனால், ஆசிய வெண்கலப் பதக்க வீரரும் லைட் பிளைவெய்ட் (49 கிலோ) பிரிவு வீரருமான அமித் பங்கல், இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இவரை தவிர, ஷியாம் குமார் (49 கிலோ), சதீஷ் குமார் (+91 கிலோ) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP