2020 ஒலிம்பிக்ஸ் தங்கத்தை குறிவைக்கும் மேரி கோம்!

சர்வதேச பெண்கள் குத்துசண்டை சாம்பியன்ஷிப்பில் 6வது தங்கப்பதக்கத்தை வென்று, சர்வதேச அலைவ்ல் சாதனை படைத்த இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் கனவு இன்னும் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 | 

2020 ஒலிம்பிக்ஸ் தங்கத்தை குறிவைக்கும் மேரி கோம்!

சர்வதேச பெண்கள் குத்துசண்டை சாம்பியன்ஷிப்பில் 6வது தங்கப்பதக்கத்தை வென்று, உலக சாதனை படைத்த இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வெல்லும் கனவு இன்னும் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், 48 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் நாட்டை சேர்ந்த அண்ணா ஒகோட்டாவுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய மேரி கோம் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக்ஸ் தொடருக்கு கோம் தகுதி பெற்றுள்ளார்.

ஆனால் ஒலிம்பிக்ஸில் தனது எடைப்பிரிவு இல்லாதது குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஒலிம்பிக்ஸில் எனது எடைப்பிரிவு இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனால், உங்கள் அன்பும், ஆதரவும் இருந்ததால், 2020 ஒலிம்பிக்ஸ் தொடருக்கு தகுதி பெற்றுளேன். எடை அதிகரிப்பு எனக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. 2020ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வெல்லும் கனவு எனக்கு இன்னும் இருக்கிறது" என்று கூறினார். 48 கிலோ எடைப்பிரிவில் விளையாடும் மேரி கோம், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 51 கிலோ எடைப்பிரிவில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP