மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஷரபோவா, சிமோனா

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் பிரான்சின் கிறிஸ்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப், கரோலினா பிளிஸ்க்கோவாவை எதிர்கொள்ள இருக்கிறார்.
 | 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், 12 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 6-3, 2-6, 6-3 என பிரிட்டனின் கயலே எட்மண்ட் வென்றார். 

நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், 6-3, 6-1 என்ற நேர்செட்களில் கேல் மான்பில்ஸை தோற்கடித்து, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் நடால், டியாகோ ஸ்சவார்ட்ஸ்மானை சந்திக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP