மீண்டும் சி.எஸ்.கே-வுடன் இணைந்தார் லுங்கிசனி ங்கிடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார் வேகப்பந்து வீச்சாளர் லுங்கிசனி ங்கிடி.
 | 

மீண்டும் சி.எஸ்.கே-வுடன் இணைந்தார் லுங்கிசனி ங்கிடி

மீண்டும் சி.எஸ்.கே-வுடன் இணைந்தார் லுங்கிசனி ங்கிடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார் வேகப்பந்து வீச்சாளர் லுங்கிசனி ங்கிடி.

11-வது ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே தொடர்ந்து மெர்சல் காட்டி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, புல்லிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. துவக்கத்தில் அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி வீரர்களுக்கு காயம் மற்றும் ஹோம் கிரவுண்ட் மாற்றம் அணிக்கு பின்னடைவை கொடுத்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் சி.எஸ்.கே வலுவான ஒற்றுமையில் வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில், அணிக்கு கூடுதல் வலு சேர்க்க வருகிறார் லுங்கிசனி. 

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர், தனது தந்தை காலமானதை அடுத்து நாடு திரும்பினார். சி.எஸ்.கே அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்ற ங்கிடி, எதிரணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார். இன்று சென்னை அணி, மீண்டும் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சென்னை அணியுடன் இணைந்தாலும், ஆடும் லெவனில் இணைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP