பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா அணி.
 | 

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தாஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே  ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா அணி.

2018 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. 

அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அந்த அணியின் கிரிஸ் லின் 55 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா அணி. 

தொடக்கம் முதல் இந்த ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹைதராபாத் அணி கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. 

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தாநேற்று ஹைதராபாத்தில் நடந்த போட்டி தான் அந்த மைதானத்தில் இந்தாண்டு நடக்கும் கடைசி லீக் போட்டியாகும். எனவே அந்த அணி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP