கேப்டனாக கோலி நிறைய கற்க வேண்டும்: லக்‌ஷ்மணன்

கேப்டன் பொறுப்பில் விராட் கோலி இன்னும் நிறைய கற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் கூறியுள்ளார். எனினும் அவர் சிறந்த கேப்டன் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
 | 

கேப்டனாக கோலி நிறைய கற்க வேண்டும்: லக்‌ஷ்மணன்

கேப்டன் பொறுப்பில் விராட் கோலி இன்னும் நிறைய கற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கூறியுள்ளார். 

ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த லக்‌ஷ்மண் கோலி குறித்து பேசும் போது, "விராட் கோலியின் சிறந்த வீரர். 2014ம் ஆண்டு அவர் கேப்டன் பொறுப்பெற்ற பிறகு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவரின் திறமையை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அனைத்திலும் தடம் பதிக்க விரும்பும் நேர்மறையான வீரர் விராட் கோலி. 

கேப்டன் பொறுப்பு வந்த பிறகு ஆட்டத்தில் சொதப்பிய பல வீரர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் கோலியின் விஷயத்தில் அது தலைக்கீழாக இருக்கிறது. கோலி தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு அவரது ஆட்டம் சிறப்பாகி உள்ளது. அவர் சிறந்த கேப்டன் தான் ஆனால் அவர் கற்க வேண்டியவை நிறைய இருக்கின்றன" என்றார். 

சமீப காலமாக தோனி மற்றும் கோலியின் கேப்டன்சியை ஒப்பிட்டு பலரும் பேசி வரும் நிலையில் லக்‌ஷ்மண் இவ்வாறு பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP