மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்குகிறார் கபில் தேவ்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ஃப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
 | 

மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்குகிறார் கபில் தேவ்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ஃப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார். 

24 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்ட பின்னர், இந்தியாவுக்காக மீண்டும் விளையாட இருக்கிறார் கபில் தேவ். ஆனால், இந்த முறை கிரிக்கெட் போட்டிக்காக இல்லாமல், கோல்ஃப் ஆட்டத்திற்காக பங்கேற்க இருக்கிறார். ஜப்பானில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் 2018 ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ஃப் போட்டிக்கான இந்திய அணியில் கபில் தேவ் இடம் பெற்றுள்ளார். 

கடந்த ஜூலை மாதம் நொய்டாவில் நடைபெற்ற ஆல்-இந்தியா சீனியர்ஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கபில் தேவ், ஆசிய போட்டிக்கான இடத்தை பிடித்திருக்கிறார்.

இது குறித்து கபில் தேவ் கூறுகையில், "இது கிரிக்கெட்டை போல் இல்லை. ஆனால், மற்றொரு விளையாட்டுக்காக நான் இந்தியாவுக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டிற்காக விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சி, எதற்கும் ஈடாகாது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, முதல் 2,3 ஆண்டுகள் கோல்ஃப் போட்டியில் கடுமையாக உழைத்தேன்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP