தோனி போல கூலான வீரர் கேன் வில்லியம்சன்: கவாஸ்கர்

தோனி போல இக்கட்டான சூழ்நிலைகளில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூலாக இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

தோனி போல கூலான வீரர் கேன் வில்லியம்சன்: கவாஸ்கர்

தோனி போல கூலான வீரர் கேன் வில்லியம்சன்: கவாஸ்கர்தோனி போல இக்கட்டான சூழ்நிலைகளில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூலாக இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 2018ல் தொடர்ந்து வெற்றி முகம் காட்டி வருகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணியின் மிக பெரிய பலம் பந்துவீச்சு. பேட்டிங்கில் எவ்வளவு குறைவான ரன்கள் எடுத்தாலும் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி அடைந்து விடுகிறது. தற்போது 9 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றிப்பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

இந்த அணி குறித்து பேசிய முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ஹைதராபாத் அணி இந்தாண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதற்கு அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மிக பெரிய காரணம். அவர் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் தான் விளையாடினார். 4 வெளிநாட்டு வீரர்கள் தான் விளையாடும் அணியில் இருக்க முடியும் என்ற காரணத்தால் அவர் பல போட்டிகளில் தேர்வு செய்யப்படவில்லை. இந்தாண்டு பேட்ஸ்மேன் என்னும் பொறுப்போடு கேப்டன்சியும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அதை சிறப்பாக கையாள்கிறார். அதிரடியாக விளையாடி தான் வெற்றி பெற வேண்டும் என்று இல்லாமல் நிதானத்தால் வெற்றி அடைந்துள்ளார். 

அணியின் இக்கட்டான நிலையில் தோனி கூலாக இருப்பது எப்படி அவர் அணி வீரர்களின் பதட்டத்தை குறைக்கிறதோ அது போல கேன் வில்லியம்சனும் செயல்படுகிறார் என்று கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP