ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தேர்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தேர்வு

ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தேர்வுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகார்திற்கு பிறகு அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த லீமன் ராஜினாமா செய்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் லீமன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். அதனையடுத்து விரைவில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவத்து இருந்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்ததும் நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் லாங்கர் பொறுப்பேற்க உள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், இந்த பொறுப்பை ஏற்க உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை வழிநடத்தியது. எனக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் சிறந்த திறமைகள் உள்ளன. அணியின் மீது மக்களுக்கு மரியாதை உருவாகும் வகையில் அணி வீரர்களுடன் இணைந்து உழைப்பேன். நடந்தவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். அவர்கள் சிறந்த வீரர்கள் என்றார். 

இவர் 1993 முதல் 2007 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடி உள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP