மீண்டும் இணையத்தை கலக்கிய ஜிவா தோனி

மீண்டும் இணையத்தை கலக்கிய ஜிவா தோனி
 | 

மீண்டும் இணையத்தை கலக்கிய ஜிவா தோனி


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை போலவே, அவரது மகள் ஜிவாவும் பிரபலமாகி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கான பக்கத்தில் பகிர படும் புகைப்படம், வீடியோக்கள் மூலம் ஜிவாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.

தோனியும், தனக்கு கிடைக்கும் நேரத்தை மகளுடன் செலவிடுவார். தற்போது இவர்களது லேட்டஸ்ட் வீடியோ, புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தில், தோனியுடன் இருக்கும் ஜிவா, ராஜாவின் இளவரசியாக, தலையில் கிரீடத்துடன் அழகாக காட்சியளிக்கிறார். ஜிவாவின் பள்ளி ஆண்டு விழாவுக்கு சென்றுள்ள தோனி, ஜிவாவின் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டுள்ளார்.


இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால், அந்த அணியுடன் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்பார். அதுவரை ஓய்வில் இருக்கும் தோனி, குடும்பத்துடன் நேரத்தை அதிகளவில் செலவிட்டு வருகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP