ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்று வீரராக இஷ் சோதி சேர்ப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்று வீரராக நியூசிலாந்து பந்துவீச்சாளர் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார்.
 | 

11-வது ஐ.பி.எல் போட்டியில் காயம் காரணமாக விலகிய வீரர்களின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஜாஹிர் கான் சேர்ந்துள்ளார். ராஜஸ்தான் அணி, ரூ.50 லட்சத்துக்கு ஜாஹிர் கானை வாங்கியிருந்தது. தற்போது இவருக்கு பதில் மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் இஷ் சோதி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். 

டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 4-வது இடம் பிடித்திருக்கும் சோதி, 92 டி20 போட்டிகளில் 102 விக்கெட்கள் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணியில் இணைந்ததன் மூலம், ஐ.பி.எல் போட்டியில் சோதி அறிமுகமாக இருக்கிறார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் தோல்வி அடைந்திருந்தது. இன்று (ஏப்ரல் 11) நடக்கும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP