விரைவில் பெண்களுக்கான ஐ.பி.எல்- பிசிசிஐ!

ஐ.பி.எல்-ல் பெண்கள் டி20 போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
 | 

விரைவில் பெண்களுக்கான ஐ.பி.எல்- பிசிசிஐ!

விரைவில் பெண்களுக்கான ஐ.பி.எல்- பிசிசிஐ!

ஐ.பி.எல்-ல் பெண்கள் டி20 போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

மும்பையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் போட்டியின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்துக்கு முன்பாக, பெண்கள் டி20 போட்டியை கண்காட்சிக்காக பிசிசிஐ நடத்த இருக்கிறது. 11 பேர் கொண்ட இரண்டு அணிகளில் 4 வெளிநாட்டு வீராங்கனைகள் விளையாடுகின்றனர். இப்போட்டி எதிர்காலத்தில் பெண்களுக்கான ஐ.பி.எல் சீசனை நடத்துவதற்கான ஒரு சாம்பிள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஐ.பி.எல் போட்டி 2.30 மணிக்கு துவங்கும்.

பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில், "இந்த கண்காட்சி போட்டி மிகவும் தகுதியானது. இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மிகப்பெரிய ஆழம் மற்றும் திறன் கொண்டிருப்பது வெளிப்படும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பெண்கள் ஐ.பி.எல் போட்டி நடத்தப்படும்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP