ஐ.பி.எல்: கேப்டனாக 100வது டி20ல் விராட்; சென்னை - பெங்களூரு இன்று மோதல்!

11-வது ஐ.பி.எல் சீஸனின் 24-வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி துவங்குகிறது.
 | 

ஐ.பி.எல்: கேப்டனாக 100வது டி20ல் விராட்; சென்னை - பெங்களூரு இன்று மோதல்!

ஐ.பி.எல்: கேப்டனாக 100வது டி20ல் விராட்; சென்னை - பெங்களூரு இன்று மோதல்!

11-வது ஐ.பி.எல் சீஸனின் 24-வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி துவங்குகிறது. 

சென்னை அணி, ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு ஐந்து ஆட்டங்களில் இரண்டு வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னேற இன்றைய போட்டியில் கடுமையாக போட்டியிடும். 

விராட் கோலி, டி20 கேப்டனாக தனது 100-வது போட்டியில் இன்று களமிறங்க இருக்கிறார். 100-வது போட்டியில் கேப்டனாக களமிறங்கும் மூன்றாவது இந்திய வீரர் விராட். முதலிடத்தில் தோனி (244), இரண்டாவது இடத்தில் கவுதம் கம்பிர் (170) உள்ளனர். ஒட்டுமொத்தமாக விராட் எட்டாவது இடத்தில் உள்ளார். 

சென்னை- பெங்களூரு நேருக்குநேர் மோதிய 20 ஆட்டங்களில் 12ல் சி.எஸ்.கே-வும், 7ல் ஆர்.சி.பி-யும் வெற்றி பெற்றுள்ளன. சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதிய 6 போட்டிகளில், இரு அணியும் தலா 3ல் வெற்றி கண்டுள்ளது. 

சி.எஸ்.கே கேப்டன் தோனி, பெங்களூருவுக்கு எதிராக 22 இன்னிங்சில் விளையாடி 608 ரன் அடித்துள்ளார். சராசரி 32.00; ஸ்ட்ரைக் ரேட் 135.71. ஐ.பி.எல்-ல் பெங்களூருவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் தோனி முன்னணியில் இருக்கிறார். 

விராட், சென்னைக்கு எதிராக 19 இன்னிங்சில் 706 ரன் விளாசியுள்ளார். சராசரி 44.13; ஸ்ட்ரைக் ரேட் 126.98. சி.எஸ்.கே-க்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் விராட்.

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், இம்ரான் தாஹிர் உடல்தகுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் இன்று தாஹிர் களமிறங்க வாய்ப்புள்ளது. இவரது வருகையால், பாப் டு பிளேஸிஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோரில் ஒருவர் தான் களமிறங்குவார்கள். பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. பலம் பொருந்திய அணியாக இருந்தாலும், பெங்களூரு தடுமாறி வருகிறது. இதனால் தடுமாற்றத்தை சரிசெய்து விளையாடும் பட்சத்தில் பெங்களூரு வெற்றி பெறலாம். அதே சமயம் சென்னை வலுவாக இருப்பதால், தனது ஆதிக்கத்தை தொடரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

ஐ.பி.எல்: கேப்டனாக 100வது டி20ல் விராட்; சென்னை - பெங்களூரு இன்று மோதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், சர்ஃபராஸ் கான், பிரண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிராண்ட்ஹோம், மொயீன் அலி, குயின்டன் டி காக், உமேஷ் யாதவ், யூசுவேந்திர சாஹல், மனன் வோஹ்ரா, குல்வாந்த் க்ஹெஜ்ரொலியா, அனிகேத் சவுத்ரி, நவ்தீப் சைனி, முருகன் அஷ்வின், மந்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, முகமது சிராஜ், பார்திவ் படேல், அனிருதா ஜோஷி, பவன் தேஷ்பாண்டே, டிம் சௌதீ, கோரே ஆண்டர்சன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP