ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

11-வது ஐ.பி.எல் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளுக்கும் இடையில் கடும் மோதல் நிலவுகிறது.
 | 

ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

11-வது ஐ.பி.எல் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளுக்கும் இடையில் கடும் மோதல் நிலவுகிறது. வீரர்களும் போட்டிபோட்டுக் கொண்டு விளையாடுகிறார்கள். அதில் பல புதிய சாதனைகள் படைப்படுகிறது.

சில சாதனைகள் உடைக்கப்படுகிறது. ஆனால், ஐ.பி.எல் வரலாற்றில் சில சாதனைகள் இன்னும் உடைக்க முடியாத நிலையில் உள்ளன. அது என்றைக்கும் உடைக்க முடியாத நிலையில் இருக்கிறது. அப்படி என்ன சாதனைகள் என்பதை பார்ப்போம்..

ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி:

ஐ.பி.எல் வரலாற்றின் முதல் மேட்ச் கண்ட வரலாற்று சாதனை, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லமால் உருவாக்கப்பட்டது. வெறும் 73 பந்துகளில் 158 ரன்களை கொல்கத்தா அணிக்காக அடித்திருந்தார். இதனால் முதல் இன்னிங்சில் கொல்கத்தா 222 ரன்களை சேர்த்திருந்தது.

இந்த இமாலய வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 82 ரன்களில் சுருண்டது. இதனால் கொல்கத்தா அணி 140 என்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இனி ஐ.பி.எல்-ல் இப்படி ஒரு மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது கடினம் தான்.

ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

மிகவும் விலையுயர்ந்த ஓவர்:

2011ம் ஆண்டுக்கான சீசன் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொச்சி டஸ்கர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்த டர்க் நன்னெஸுக்கு பதில் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டு இருந்தார். கொச்சியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷாந்த் பரமேஸ்வரன், பெங்களூருவில் கெய்லின் தாக்குதலுக்கு ஆளானார்.

கெய்லை சுருட்ட சென்ற அவரது அந்த ஓவரில், நான்கு சிக்ஸர், மூன்று பவுண்டரி, ஒரு நோ பால் கொடுத்து, அடிவாங்கினார். அந்த ஓவரில் கெய்ல் 37 ரன்களை அள்ளினார். இந்த பிரம்மாண்ட சாதனை இனியும் நிகழுமா... கெய்ல் மனது வைத்தால்தான் முடியும்.

ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:

மீண்டும் கிறிஸ் கெய்ல் காட்டிய வாணவேடிக்கை. இந்த முறை வாயடைத்துப் போனது புனே வாரியர்ஸ். முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் விளையாடிய கிரிஸ் கெயில் எடுத்த விஷ்வரூபத்தால், அந்த அணி 263 ரன்கள் குவித்தது. புனே வாரியர்ஸின் அனைத்து பந்து வீச்சாளர்களையும் தெறிக்கவிட்டார்.

அதில் அதிகபட்சமாக, ஈஸ்வர் பாண்டே பந்துகளில் 21, மிட்செல் மார்ஷ் பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார். மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிய வாரியர்ஸ் 133 ரன்னில் சுருள, பெங்களூரு 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் கெயில் இல்லாததன் வேதனையை இப்போது பெங்களுரு ரசிகர்கள் புரிந்திருப்பார்கள்.

ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

மிகப்பெரிய தனிநபரின் ஸ்கோர்:

மீண்டும் மீண்டும் கிறிஸ் கெய்ல் தான் இந்த பட்டியல் முழுக்க நிரம்பி இருக்கிறார். இவரது இந்த சாதனைகள் இனி வரும் ஐ.பி.எல் போட்டிகளில் முறியடிக்கப்படுமா என்பது சந்தேகம் தான். இந்த (2018) சீசனில் அவரது வெறித்தனத்தை பார்த்தால், அவரே அவரது சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது தெரிகிறது. ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெய்ட்டு டா பாக்குறியா... என்பது போல் தான் கெய்லின் ரியாக்ஷன் உள்ளது.

ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

இம்முறை ஒரு தனிநபராக மிகப்பெரிய ரன்னை அவர் குவித்தார். புனே அணிக்கு எதிராக 17 சிக்ஸர்களுடன் 175 ரன்களை அசால்ட்டாக பறக்கவிட்டார். அதிலும் வெறும் 30 பந்துகளில் சதமடித்து அனைவரையும் வாய்பிளக்கச் செய்தார் சிக்ஸர் மன்னன்.. அனேகமாக இந்த சாதனையை அவரால் கூட நெருங்க முடியாது போல...

ஐ.பி.எல்: முறியடிக்க முடியாத சாதனைகள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP