ஐ.பி.எல்: பஞ்சாப் - பெங்களூரு போட்டியில் இப்படியும் சில சாதனைகள்!

ஐ.பி.எல் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது.
 | 

ஐ.பி.எல்: பஞ்சாப் - பெங்களூரு போட்டியில் இப்படியும் சில சாதனைகள்!

ஐ.பி.எல்: பஞ்சாப் - பெங்களூரு போட்டியில் இப்படியும் சில சாதனைகள்!

ஐ.பி.எல் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது. பஞ்சாப் நிர்ணயித்த 88 ரன் இலக்கை, 8.1 ஓவரில் பெங்களூரு எட்டியது.

இதன் மூலம், ஐ.பி.எல் வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில், மூன்றாவது முறையாக வெற்றியை பெங்களூரு பதிவு செய்துள்ளது. மேலும், ஒரு விக்கெட் கூட இழக்காமல் பெங்களூரு வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். தவிர, இப்போட்டியில் பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அதன் விவரம் பின் வருமாறு:-

* இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (88 ரன்) அணிக்கு முன், குறைந்த ரன் இலக்கை நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான 87 ரன்னில் மும்பை சுருண்டிருந்தது. 

* 2017ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் குறைவான ரன் இலக்கு அமைந்தது. அந்த அணிக்கு எதிராக 73 ரன்னில் ஆட்டமிழந்திருந்தது பஞ்சாப். மேலும், 2015ம் ஆண்டிலும், பெங்களூரு அணிக்கு எதிராக 88 ரன்னில் பஞ்சாப் ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐ.பி.எல்: பஞ்சாப் - பெங்களூரு போட்டியில் இப்படியும் சில சாதனைகள்!

* பெங்களூரு அணி, 2009ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் (58 ரன்), 2010ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் (82 ரன்) அணியையும் குறைந்த ரன்களில் சுருட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

* ஐ.பி.எல் போட்டியில் குறைந்த ரன் இலக்கு, இதற்கு முன் 2011ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்தூரின் ஹோல்கர் மைதானத்தில், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 97 ரன் எடுத்திருந்தது. 

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான உமேஷ் யாதவ் 26 விக்கெட்கள் கைப்பற்றினார். அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரரான சுனில் நரேனுடன், உமேஷ் யாதவ் இணைந்துள்ளார். சுனில் நரேன், பஞ்சாபுக்கு எதிராக 26 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். உமேஷ், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிராக 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நரேன், கொல்கத்தாவுக்கு எதிராக மட்டும் எடுத்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP