ஐ.பி.எல்: டி20ல் 6000 ரன் மைல்கல்லை எட்டினார் எம்.எஸ். தோனி!

சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி, டி20-ல் 6000 ரன் மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
 | 

11-வது ஐ.பி.எல் போட்டியில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி 34 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி, 17 ரன்கள் சேர்த்தார். 

இதன் மூலம், 290 டி20 போட்டிகளில் தோனி, 6007 ரன்களை பதிவு செய்தார். சுரேஷ் ரெய்னா (7708), விராட் கோலி (7621), ரோஹித் சர்மா (7303), கவுதம் கம்பிர் (6402) ஆகியோருக்கு பிறகு 6000 மைல்கல்லை எட்டிய 5-வது இந்திய வீரர் தோனி ஆவார். 

இந்த சீசனில் தோனி இதுவரை, 13 போட்டிகளில் 430 ரன்கள் அடித்துள்ளார். 29 சிக்ஸர், 22 பவுண்டரிகளையும் விரட்டியுள்ளார். சராசரி 86.00. ஸ்ட்ரைக் ரேட் 155.23.

வருகிற 20ம் தேதி புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP