ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம்!

சென்னையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 | 

ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம்!

ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம்!

வருகிற 20ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிறுத்தியுள்ளது.

சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று பல அமைப்புக்கள் போராடி வருகின்றன. காவிரிக்கான போராட்டமா, ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டமா என்று யோசிக்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடக்கிறது. பல அமைப்புக்களும் வீரர்களுக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றன. இதனால், சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்துவது சரியாக இருக்காது என்று பல வீரர்களும் கருதுகின்றனர்.

இதைத் தொடர்ந்து போட்டிகளை இட மாற்றம் செய்வதற்கான ஆலோசனையில் ஐ.பி.எல் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கொச்சிக்கு இட மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த போட்டி வருகிற 20ம் தேதி நடக்கிறது. அதற்கான டிக்கெட் விற்பனை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆனால், டிக்கெட் விற்பனை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போட்டி நடப்பதே உறுதியாகவில்லை என்பதால், டிக்கெட் விற்பனை அடுத்த அறிவிப்பு வரும் வரை மேற்கொள்ள வேண்டாம் என்று ஸ்டேடியம் நிர்வாகிகளையும் இதர ஆன்லைன் டிக்கெட் விற்பனையாளர்களையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், சி.எஸ்.கே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP