திட்டமிட்ட படி புனேவில் ஐ.பி.எல் போட்டி நடக்கும்: மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி புனேவில் நடைபெறும் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
 | 

திட்டமிட்ட படி புனேவில் ஐ.பி.எல் போட்டி நடக்கும்: மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

திட்டமிட்ட படி புனேவில் ஐ.பி.எல் போட்டி நடக்கும்: மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிவிப்புஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி புனேவில் நடைபெறும் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறக் கூடாது என்று கூறி தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடைசியாக சென்னையில் நடைபெற்ற போட்டியின் போது போராட்டங்கள் நடந்ததை அடுத்து பாதுகாப்பு காரணமாக சென்னையில் அடுத்து நடைபெற இருந்த 6 போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டது. 

மகாராஷ்டிராவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தின் விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திடம் மைதானத்திற்கு தேவையான நீரை எப்படி பெறுவீர்கள் என்று மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

இந்நிலையில் நீதிமன்றத்தின் நோட்டீசுக்கு மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் பதிலளித்துள்ளது. அதில் மைதானத்திற்கு தேவையான தண்ணீரை புனே, மும்பை மாநகராட்சியில் இருந்து எடுக்கப் போவதில்லை எனவும், பவனா அணையில் போதிய நீர் உள்ளதால் அதை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி புனேவில் நடக்கும் என்றும்தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP