ஐ.பி.எல்: சென்னையுடன் மோதப்போவது கொல்கத்தாவா? சர்ச்சை கிளப்பிய ஹாட்ஸ்டார் விளம்பரம்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோதிக்கொள்ளும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளானர்.
 | 

ஐ.பி.எல்: சென்னையுடன் மோதப்போவது கொல்கத்தாவா? சர்ச்சை கிளப்பிய ஹாட்ஸ்டார் விளம்பரம்

ஐ.பி.எல்: சென்னையுடன் மோதப்போவது கொல்கத்தாவா? சர்ச்சை கிளப்பிய ஹாட்ஸ்டார் விளம்பரம்ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னையுடன் கொல்கத்தா விளையாடுவது போன்ற விளம்பரத்தை  ஹாட்ஸ்டார் வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐ.பி.எல் போட்டிகள் கடந்த 11 ஆண்டுகளாக நடந்த வருகிறது. இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் திருவிழா என ஐபிஎல் தொடரை குறிப்பிடுகின்றனர். என்னதான் இந்த தொடர் கொண்டாட்டமாக நடைபெற்றாலம் சூதாட்டம், விளம்பரம், ஏலம் என இதிலும் சர்ச்சைகள் பல உள்ளன. இளம் வீரர்களை ஊக்கவிக்க தொடங்கப்பட்ட ஐ.பி.எல் காலப்போக்கில் பணம் விளையாடும் களமாக மாறியது. 

இந்நிலையில், இந்த சீசன் ஐ.பி.எல் போட்டியின் நம்பகத்தன்மை பற்றியும் புதிதுபுதிதாக பல சர்ச்சைகள் கிளம்பின. ஐ.பி.எல் போட்டிகளில் யாருக்கு வெற்றி என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என தொடர்ந்து பலர் கூறி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன் மூலம் ஐ.பி.எல் போட்டியை நேரடியாக ஒளிப்பரப்பும் உரிமத்தை பெற்றுள்ள ஹாட்ஸ்டார், ஒவ்வொரு போட்டிக்கும் பிரோமோவை வெளியிடும். அந்த வகையில் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் இறுதி போட்டிக்கு அந்நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இன்று தான் இரண்டாவது எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. கொல்கத்தாவும்  ஹைதராபாத்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றியடையும் அணிதான் இறுதி சுற்றில் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பே இந்த பிரோமாவை ஹாட்ஸ்டார் உருவாக்கி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 'ஐபிஎல் போட்டிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை' என குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகத்திடமோ அல்லது ஹாட்ஸ்டாரிடமோ இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

ஒரு பக்கம இந்த வீடியோ வைரலாகி வர தற்போது புதிதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் சென்னையும் ஹைதராபாத்தும் இறுதிபோட்டியில் மோதுவது போல உள்ளது. அந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP