ஐ.பி.எல்: சி.எஸ்.கே அணியில் இருந்து கேதார் ஜாதவ் விலகல்

காயம் காரணமாக கேதார் ஜாதவ் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். இனி வரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஐ.பி.எல்: சி.எஸ்.கே அணியில் இருந்து கேதார் ஜாதவ் விலகல்

ஐ.பி.எல்: சி.எஸ்.கே அணியில் இருந்து கேதார் ஜாதவ் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கேதார் ஜாதவ் விலகியுள்ளார். 

ஐபிஎல் தொடரில் மும்பையுடனான முதல் போட்டியின் சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு முக்கிய புள்ளியாக இருந்தவர் கேதார் ஜாதவ். கடைசி ஓவரின் 4, 5வது பந்தில் சும்மா, சிக்சரும், பவுண்டரியும் பறக்க விட்டு விளாசிய கேதார் ஜாதவ், சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவர் தற்போது காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து விலகியதாக பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, ’சென்னை அணி வீரர்கள் கருப்பு உடை அணிந்து போட்டியில் பங்கேற்பார்களா? என்ற கேள்விக்கு, அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தான் இதுகுறித்து முடிவு எடுப்பார். தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என கூறினார்.

கேதாருக்கு பதில் நாளைய போட்டியில் முரளி விஜய் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP