ஐ.பி.எல்: சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர்!

ஐ.பி.எல்-ல் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து விரேந்தர் சேவாக்கின் சாதனையை சமன் செய்தார் ஜோஸ் பட்லர்.
 | 

ஐ.பி.எல்: சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர்!

ஐ.பி.எல்: சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர்!

ஐ.பி.எல்-ல் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து விரேந்தர் சேவாக்கின் சாதனையை சமன் செய்தார் ஜோஸ் பட்லர். 

ஐ.பி.எல் போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அதிரடியான ஆட்டத்தை துவங்கி மந்தமான முடிவை எட்டிய மும்பை 169 ரன் இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. கடந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜோஸ் பட்லர், இப்போட்டியிலும் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 53 பந்துகளை சந்தித்த அவர், 9 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 94 ரன்களை விளாசினார்.

இந்த ஐ.பி.எல் சீசனில் பட்லர் தொடர்ச்சியாக விளாசும் ஐந்தாவது அரைசதம் இதுவாகும். இதன் மூலம், ஐ.பி.எல் போட்டியின் முன்னாள் வீரர் சேவாக்கின் சாதனையை பட்லர் சமன் செய்தார். 2012ம் ஆண்டு தொடர்ச்சியாக ஐந்து முறை சேவாக் அரைசதம் அடித்திருந்தார்.

ஐ.பி.எல்: சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர்!

இப்போட்டிக்கு முன், 26 பந்துகளில் 67, 39 பந்துகளில் 51, 58 பந்துகளில் 82, 60 பந்துகளில் 95 ரன் அடித்திருந்தார் பட்லர். 12 போட்டிகளில் 509 ரன்கள் அடித்திருக்கும் பட்லரின் சராசரி 56.55 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 153.77 ஆக உள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே-ஆஃப் சுற்றை அந்த அணி எட்டும். வரும் மே 15ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மோத உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP