ஐ.பி.எல்: டெல்லியை பந்தாடுமா சி.எஸ்.கே?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று எதிர்க்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பஞ்சாப்பிடமும், மும்பையிடம் 2 முறை வெற்றியை பறிக்கொடுத்த சிஎஸ்கே டெல்லிக்கு வெற்றியை விட்டுக்கொடுக்குமா? இல்லை தட்டிப்பறிக்குமா? என்பது ரசிகர்களின் சர்ப்பரைஸ் எதிர்பார்ப்பாகவுள்ளது.
 | 

ஐ.பி.எல்: டெல்லியை பந்தாடுமா சி.எஸ்.கே?

ஐ.பி.எல்: டெல்லியை பந்தாடுமா சி.எஸ்.கே?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று எதிர்க்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பஞ்சாப்பிடமும், மும்பையிடம் வெற்றியை பறிக்கொடுத்த சி.எஸ்.கே டெல்லிக்கு வெற்றியை விட்டுக்கொடுக்குமா? இல்லை தட்டிப்பறிக்குமா? என்பது ரசிகர்களின் சர்ப்பரைஸ் எதிர்பார்ப்பாகவுள்ளது. 

11 வது ஐ.பி.எல் தொடரில், 7 போட்டிகளை சந்தித்த சென்னை அணி, அதிரடியான ஆட்டத்தால் 5 போட்டிகளில் வெற்றி தடம் பதித்தது. மும்பை, பஞ்சாப்பிடம் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே இன்று நடைபெறும் போட்டியில் தோல்வியை சமாளித்து மீண்டு வருமா என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பிராவோ, வாட்ஸன், ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி என பல துடுப்பான ஆட்டகாரர்கள் வசம் சி.எஸ்.கே இருந்தாலும் கடந்த வெள்ளியன்று மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவியது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹருக்கு பதிலாக இங்கிலாந்தின் லுங்கிசனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 7 போட்டியில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பின், அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியுள்ளது. அதன்பின் சென்னையுடன் விளையாட களமிறங்குவது குறிப்பிடதக்கது. இந்த சீசனில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதுவது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்ப்பார்ப்பு மேலும் வலுத்துள்ளது. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி: ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பந்த், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் ராய், கொலின் முன்றோ, முகமது ஷமி, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ப்ரித்வி ஷா, ராகுல் தேவாதியா, விஜய் ஷங்கர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ஷாபாஸ் நதீம், டேனியல் கிறிஸ்டின், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மான், ட்ரெண்ட் பௌல்ட, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, சந்தீப் லாமிச்சனே, நமன் ஒஜ்ஹா, ஸயன் கோஷ், கவுதம் கம்பிர். 

ஐ.பி.எல்: டெல்லியை பந்தாடுமா சி.எஸ்.கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ள தீபக் சாகருக்கு பதிலாக லுங்கிசனி ங்கிடி விளையாடவுள்ளார்.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP