ஐ.பி.எல்: சி.எஸ்.கே-வுடனான பலப்பரீட்சையில் கொல்கத்தா... வெற்றி பெறுவது யார்?

11-வது ஐ.பி.எல் சீசனின் 33-வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
 | 

ஐ.பி.எல்: சி.எஸ்.கே-வுடனான பலப்பரீட்சையில் கொல்கத்தா... வெற்றி பெறுவது யார்?

ஐ.பி.எல்: சி.எஸ்.கே-வுடனான பலப்பரீட்சையில் கொல்கத்தா... வெற்றி பெறுவது யார்?

11-வது ஐ.பி.எல் சீசனின் 33-வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி துவங்குகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனில் மிகுந்த பலம் பொருந்திய அணியாக உள்ளது. இதுவரை தான் சந்தித்த 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சி.எஸ்.கே கேப்டன் தோனி, ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு வருகிறார். 

இதனால் தோல்வியின் விளிம்பிற்கு சென்றாலும் முடிவில் வெற்றியை தட்டிப்பறித்து விடுகிறது சி.எஸ்.கே. ஆனால், பந்துவீச்சில் சி.எஸ்.கே அத்தனை வலிமையாக இல்லை. இதனை அணி சிறப்பாக கையாளும் பட்சத்தில் எந்த அணியும் சென்னையை சாய்க்க முடியாது. ஏற்கனவே கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில், சொந்த மண்ணில் சென்னை வீழ்த்தியிருந்தது. இதனால் சென்னை மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக், பெரியளவில் சோபிக்கவில்லை. அந்த அணி, 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று, நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சிக்கும் அதே நேரம், சொந்த மண்ணில் சென்னைக்கு பதிலடி கொடுக்க, கொல்கத்தா கடுமையாக போராடும். 

ஐ.பி.எல்: சி.எஸ்.கே-வுடனான பலப்பரீட்சையில் கொல்கத்தா... வெற்றி பெறுவது யார்?

ஐ.பி.எல்-ல் இதுவரை இவ்விரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. அதில் சி.எஸ்.கே 11 வெற்றிகளையும், கொல்கத்தா 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, மிட்செல் ஜான்சன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஷுப்மான் கில், இஷாங்க் ஜக்கி, கம்லேஷ் நாகர்கோட்டி, நிதிஷ் ராணா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, ரிங்கு சிங், சிவம் மாவி, கேமரூன் டெல்போர்ட், ஜெவோன் சீர்லெஸ், டாம் கர்ரான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ள தீபக் சாகருக்கு பதிலாக லுங்கிசனி ங்கிடி விளையாடவுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP