ஐ.பி.எல்: சி.எஸ்.கே-வுடன் 2-வது போட்டி! மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

2018 ஐ.பி.எல் சீஸனின் 27-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் போட்டி நடக்கிறது.
 | 

ஐ.பி.எல்-ன் துவக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, அதன் சொந்த மண்ணில் சென்னை அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதுகின்றன. ஹோம் கிரவுண்ட்டில் ஏற்பட்ட தோல்விக்கு மும்பை பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது. அதே சமயம் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் அசராமல் இருக்கும் சென்னை, இரண்டாவது முறையாக மும்பையை வீழ்த்தும் ஆர்வத்தில் உள்ளது. 

சென்னை கேப்டன் தோனியின் ஃபார்ம் பயங்கரமாக இருப்பதால் எதிரணிகள் கலங்கி போய் உள்ளனர். ஆறு போட்டிகளில் 209 அடித்துள்ள தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 165.87 ஆக உள்ளது. 2013ம் ஆண்டுக்கு பிறகு இரண்டு அரைசதம் அடித்துள்ளார். சென்னையின் நம்பிக்கை நட்சத்திரமாக அம்பதி ராயுடு ஜொலிக்கிறார். தவிர, வாட்சன், பிராவோ, சாம் பில்லிங்ஸ் வலு சேர்க்கின்றனர். பந்துவீச்சில் சாகர், தாகூர், தாஹிர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளதால் சென்னை பலமாக உள்ளது. மேலும், புனே மைதானத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய சென்னை காத்திருக்கிறது. 

ஐ.பி.எல்: சி.எஸ்.கே-வுடன் 2-வது போட்டி! மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் அணி சற்று கவலைக்கிடமாக தான் உள்ளது. ஒரு வெற்றி, ஐந்து தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்திருக்கும் மும்பைக்கு இன்றைய போட்டியில் வெற்றி என்பது மிகவும் அவசிய தேவையாக இருக்கிறது.

இவ்விரு அணிகள் இதுவரை மோதிய ஆட்டங்களில், மும்பை இந்தியன்ஸ் 12 வெற்றியும், சென்னை 11 வெற்றியையும் பெற்றுள்ளன.  

ஐ.பி.எல்: சி.எஸ்.கே-வுடன் 2-வது போட்டி! மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. 

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, கிரான் பொல்லார்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், பேட் கம்மின்ஸ், சூரியகுமார் யாதவ், க்ருனால் பாண்ட்யா, இஷான் கிஷான், ராகுல் சாகர், ஏவின் லீவிஸ், சௌரப் திவாரி, பென் கட்டிங், பிரதீப் சங்வான், ஜீன்-பால் டுமினி, தஜிந்தர் சிங், ஷரத் லும்பா, சித்திதேஷ் லாத், ஆதித்யா தாரே, மயங்க் மார்கண்டே, அகிலா தனன்ஜெய, அனுக்குல் ராய், மொஹ்சின் கான், எம்.டி. நிதேஷ், மிட்செல் மெக்லேனகன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP