ஐ.பி.எல் 2018: சி.எஸ்.கே அணியின் பீல்டிங் பயிற்சியாளரானார் ராஜிவ் குமார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் உள்ளூர் அணி கேப்டன் ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

ஐ.பி.எல் போட்டிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பியிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல்-ல் இதுவரை சி.எஸ்.கே அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அணிக்கு பீல்டிங் கோச்சாக ஸ்டீவ் ரிஸ்ன் இருந்து வந்த நிலையில், அவருக்கு பதில் முன்னாள் பீகார் மற்றும் ஜார்கண்ட் அணி கேப்டன் ராஜிவ் குமார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 

தோனியுடன், பீகார்/ஜார்கண்ட் அணிகளுக்கான போட்டியில் ராஜிவ் குமார் விளையாடியுள்ளார். இதனால் ராஜிவ் குமாரை தேர்வு செய்ய இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை சி.எஸ்.கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். சி.எஸ்.கே அணியில் ஸ்டீபன் பிளெமிங், லட்சுமிபதி பாலாஜி, மைக் ஹஸ்ஸி, லட்சுமி நாராயணன் ஆகிய பயிற்சியாளர்களுடன் ராஜிவ் குமார் இணைந்துள்ளளர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP