சிஎஸ்கே அணியை துறத்தும் காயம்.. இளம் வீரர் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 வாரங்கள் விளையாட மாட்டார் என்று சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்துள்ளார்.
 | 

சிஎஸ்கே அணியை துறத்தும் காயம்.. இளம் வீரர் விலகல்

சிஎஸ்கே அணியை துறத்தும் காயம்.. இளம் வீரர் விலகல்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 வாரங்கள் விளையாட மாட்டார் என்று சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணத்ததால் அடுத்தடுத்து வீரர்கள் விலகி வருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னரே டுப்பிளேசி, முரளி விஜய் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தனர். அதனையடுத்து முதல் போட்டியிலேயே கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் இந்த தொடரில் இருந்தே விலகினார். 

அடுத்து சுரேஷ் ரெய்னாவக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சை பெற்று மீண்டும் களமிறங்கினார். மேலும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதுகு வலியால் தோனி அவதிப்பட்டார்.

இவ்வாறு அடுத்தடுத்து சென்னை அணி வீரர்கள் காயத்தால்அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் நிலையான அணியை அமைக்க முடியாமல் தவிக்கிறது சென்னை அணி இந்நிலையில் சென்னை அணியில் மேலும் ஒரு வீரர் காயம் அடைந்துள்ளார். 

மும்பைக்கு எதிராக நேற்று நடந்த லீக் போட்டியில் தீபக் சாஹர், தனது 3வது ஓவரின் முதல் பந்தை வீசும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் நிற்க கூட முடியாமல் அங்கிருந்து அவர் டிரெசிங் ரூமிற்கு சென்றார்.

இந்நிலையில் இன்று அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் அடுத்த 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். 

இளம் வீரர் தீபக் சாஹர், சென்னை இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் இடம் பெற்று 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஹைதரபாத் அணிக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்தி 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த சாஹரை தோனி புகழ்ந்தார். சென்னை அணியின் தொடக்க ஓவர்களை வீசி வந்த சாஹர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக தான் இருக்கும். 

இந்த இடத்தை நிரப்ப தென்னாப்பிரிக்கா அணியின் லுங்கி நிகிடி அணிக்கு திரும்பி இருப்பதால் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங்கில் ஸ்டாராங்காக இருக்கும் சென்னை அணிக்கு பந்துவீச்சு தான் மிகபெரிய மைனசாக உள்ளது. இந்நிலையில் லுங்கி நிகிடியின் வரவு அதை மாற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP