வில்வித்தை உலக கோப்பை: இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது

வில்வித்தை உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
 | 

வில்வித்தை உலக கோப்பை: இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது

வில்வித்தை உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 

பெர்லினில் வில்வித்தை உலக கோப்பை- ஸ்டேஜ் 4 போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் காம்பவுண்ட் அணி இறுதிச் சுற்றில், இந்தியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்தியாவின் திரிஷா டெப், முஸ்கன் கிறார் மற்றும் ஜோதி சுரேகா, ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிரான்சிடம் (229-228) தங்கப்பதக்கத்தை தவறவிட்டனர். 

இந்திய அணி, அரையிறுதியில் துருக்கியை (231-238) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தனர். அதற்கு முன் காலிறுதியில் அமெரிக்காவையும் (232-228) மற்றும் முதல் போட்டியில், கிரேட் பிரிட்டன் (224-223) அணியையும் தோற்கடித்திருந்தனர். 

இந்திய வில்வித்தை வீராங்கனைகளான அதனு தாஸ், தீபிகா குமாரி, அபிஷேக் வர்மா, திரிஷா ஆகியோர் தனிநபர் சுற்றில் பதக்கம் வெல்ல தவறினர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP