இந்திய ஓபன் குத்துச் சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்

இந்திய ஓபன் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்
 | 

இந்திய ஓபன் குத்துச் சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்

இந்திய ஓபன் குத்துச் சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

டெல்லியில் நடந்துவரும் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில், பிலிப்பைன்ஸின் ஜோஷி கபுவை 4-1 என்ற கணக்கில், மேரி கோம் (48 கிலோ) வென்றார். 64 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அசாம் வீராங்கனை பிவிலோ பசுமாதாரி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

மற்றொரு அசாம் வீராங்கனையான லோவ்லினா போர்கோஹேன் 69 கிலோ எடைப் பிரிவில் தங்கம் ஜெயித்தார். இவர்களை தவிர, பிங்கி ஜங்கிரா (51 கிலோ), மனிஷா (60 கிலோ) ஆகியோரும் தங்கம் வென்றனர். சரிதா தேவி, இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார். சவீதி புறா, இறுதி போட்டியில் தோல்வி அடைந்தார்.

ஆண்கள் பிரிவு இறுதி சுற்றில், சஞ்ஜீத் (91 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ) தங்கம் வென்றனர். ஷிவ தபா தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP