42 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்

இந்தியாவின் ஓட்டப்பந்தய வீரரான ஜின்சன் ஜான்சன், 42 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
 | 

42 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்

இந்தியாவின் ஓட்டப்பந்தய வீரரான ஜின்சன் ஜான்சன், 42 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். 

கவுகாத்தியில் 58-வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவருக்கான 800மீ ஓட்டப்பந்தயத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன், பந்தய தூரத்தை 1:45.65 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். 

1976ம் ஆண்டு மாண்ட்ரீல் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீராம் சிங் 1:45.77 விநாடிகளில் 800மீ இலக்கை கடந்திருந்தே சாதனையாக இருந்தது. தற்போது அந்த நீண்ட கால சாதனையை 42 வருடங்களுக்கு பிறகு ஜான்சன் முறியடுத்து உள்ளார். 800மீ பந்தயத்தில் தங்கம் வென்ற ஜான்சன், ஜகார்த்தா-பலாம்பங் ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றார். 

800மீ பிரிவில் போட்டியிட்ட மற்ற வீரர்களான ஹரியானாவைச் சேர்ந்த மஞ்சித் சிங் (வெள்ளி, 1:46.24 விநாடி), மணிப்பூரின் முகமது அப்சல் (வெண்கலம், 1:46.79), ஹரியானாவின் பெண்ட் சிங் (4-வது இடம், 1:46.92) ஆகியோரும் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆனால், இவர்களால் ஜகார்த்தா போட்டிக்கு தகுதி பெற முடியாது. ஏனெனில் விதிமுறைபடி முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்கள் மட்டுமே ஜகார்த்தா போட்டியில் பங்கேற்க முடியும். 

மகளிருக்கான 200மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ், பந்தய தூரத்தை 23.10 விநாடியில் எட்டி, தங்கப்பதக்கம் வென்றார். இவரும் ஆசிய போட்டியில் பங்கேற்பதற்காக வாய்ப்பை பெற்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP