சிறப்பு ஒலிம்பிக்கில் 188 மெடல்கள் வென்ற இந்தியா

அபுதாபியில் கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய குழு இதுவரை 50 தங்கம் உட்பட 188 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டிகள் வரும் 22ம் தேதிவரை நடைபெற உள்ளது.
 | 

சிறப்பு ஒலிம்பிக்கில் 188 மெடல்கள் வென்ற இந்தியா

அபுதாபியில் கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய குழு  இதுவரை 50 தங்கம் உட்பட 188 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.

2019ம் ஆண்டுக்கான கோடை கால சிறப்பு ஒலிம்பிக் போட்டி அபுதாபியின் ஜாயித் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த விளையாட்டு போட்டிகள் 22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து சென்ற குழு இதுவரை 188 மெடல்கள் வென்றுள்ளது. இதில் 50 தங்கம், 63 வெள்ளி மற்றும் 75 வெண்கல பதக்கங்கள் அடங்கும். 

15வது சிறப்பு ஒலிம்பிக் போட்டியான இதில் 190 நாடுகளில் இருந்து 7500 தடகள வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 24 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றனர். 

ஒருபக்கம் இந்தியாவை சேர்ந்த சிறப்பு தடகள வீரர்கள் சாதனைப்படைத்துவர இதுகுறித்து பெரிதளவில் யாரும் பேசவில்லை என்ற வருத்தமும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக ஐபிஎல், தேர்தல் என அனைவரும் இருக்கும் சிறப்பு ஒலிம்பிக் நடைபெற்ற வருகிறது என்ற தகவல் கூட பலருக்கு தெரியவில்லை என்று ஆர்வலர் தெரிவிக்கின்றனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP