காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு இன்று 3 தங்கம், 1 வெள்ளிப்பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டைவீரர் அமித் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
 | 

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு இன்று 3 தங்கம், 1 வெள்ளிப்பதக்கம்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு இன்று 3 தங்கம், 1 வெள்ளிப்பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இன்று மட்டுமே 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.  

2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இன்றைய குத்துச்சண்டை போட்டியில் ஆடவர் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு இன்று 3 தங்கம், 1 வெள்ளிப்பதக்கம்

மேலும், 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 

இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என 46 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தொடர்கிறது.

முன்னதாக இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இன்று தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்று மட்டுமே இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP