காமன்வெல்த் போட்டியில் பத்து பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியா பத்து பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. இவைகளைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
 | 

காமன்வெல்த் போட்டியில் பத்து பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா

காமன்வெல்த் போட்டியில் பத்து பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியா பத்து பதக்கங்களை வென்றுள்ளது. 

பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. அவர்களை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

காமன்வெல்த் 2018 போட்டியில் நான்காம் நாளான நேற்று  பளுதூக்கும் போட்டியில் பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது. 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில்  இந்தியாவை சேர்ந்த 16 வயதே ஆன மனு பாகர் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இன்றைய போட்டிகளில் இதுவரை இந்தியா இரு தங்கப் பதக்கம் வென்றுள்ளது.  இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோத உள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP