ஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் கோலி, பும்ரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் பேட்டிஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவும் முதல் இடத்தில் உள்ளனர்.
 | 

ஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் கோலி, பும்ரா

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் கோலி மற்றும் பும்ரா முதல் இடத்தில் உள்ளனர். 

மேற்கிந்திய தீவுகள் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் கோலி ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் 899 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடித்து வருகிறார். 

அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். டாப் 10 பேட்ஸ்மேன்களில் இவர்களை தவிர்த்து ஷிகர் தவான் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் 767 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். தோனி தொடர்ந்து 20வது இடத்தில் நீடித்து வருகிறார். 

இதே போல பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் டாப் 10 பேரில் மூன்று இந்தியர்கள் உள்ளனர். இதில் பும்ரா 841 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். குல்திப் யாதவ் 723 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சாஹல் 5வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் உள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP