முகமது ஹபீஸ் மீண்டும் விளையாட ஐசிசி அனுமதி

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸின் தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
 | 

முகமது ஹபீஸ் மீண்டும் விளையாட ஐசிசி அனுமதி

முகமது ஹபீஸ் மீண்டும் விளையாட ஐசிசி அனுமதி

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸின் தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 

கடந்த அக்டோபர் மாதம் அபு தாபியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது. பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், போட்டியில் விதிமுறையை மீறி பந்துவீசியது தெரியவந்தது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக குற்றம் சாட்டப்பட்டார். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 17ம் தேதி, இங்கிலாந்தில் ஹபீஸின் பந்துவீச்சு மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அதில் அவரது பந்துவீச்சு குறிப்பிட்ட 15 டிகிரி அளவில் இருந்தது. இதனால் தற்போது அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாட ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. 

ஹபீஸ், முதல்முறையாக 2014ம் ஆண்டு விதிமுறையை மீறி பந்துவீசியதாக குற்றம் சுமத்தப்பட்டார். அதனால் தடை பெற்ற அவர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் விளையாட அனுமதி வழங்கப்பட்டார். ஆனால், மீண்டும் 2015 ஜூலை மாதம் ஓராண்டு தடை பெற்றார். 2016 நவம்பர் மாதம் மீண்டும் தடை வாங்கியதால், தடையில் இருந்து அவரால் மீள முடியவில்லை. 

தற்போது பாகிஸ்தான் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் ஹபீஸ் இடம் பெறவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP