பஞ்சாபுக்காக விளையாடுவேன் என்று நினைக்கவில்லை- கே.எல். ராகுல்

11-வது ஐ.பி.எல் சீசன் பிளே-ஆஃப் சுற்றை நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு கலந்த பதபதப்பும் அதிகமாகி உள்ளது.
 | 

பஞ்சாபுக்காக விளையாடுவேன் என்று நினைக்கவில்லை- கே.எல். ராகுல்

பஞ்சாபுக்காக விளையாடுவேன் என்று நினைக்கவில்லை- கே.எல். ராகுல்

11-வது ஐ.பி.எல் சீசன் பிளே-ஆஃப் சுற்றை நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு கலந்த பதபதப்பும் அதிகமாகி உள்ளது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும், இந்த சீசனில் முற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றன.

இதில் சில அணிகளுக்கு கிடைத்திருக்கும் சில வீரர்கள் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அப்படி அமைந்தவர்களில் ஒருவர் கே.எல். ராகுல். இவர் இந்த முறை பெங்களூரு அணியில் இருந்து பஞ்சாபுக்காக வாங்கப்பட்டார். ரூ.11 கோடி கொடுத்து பஞ்சாப் அவரை பெற்றது.

10 போட்டிகளில் 471 ரன் அடுத்துள்ள ராகுலின் சராசரி 58.88 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 156.48. பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தை இவர் கொண்டு வருகிறார். பஞ்சாப் அணியை பிளே-ஆஃப் வாய்ப்பு வரை முன்னோக்கி செல்ல வைத்ததில் ராகுலுக்கு முக்கிய பங்குண்டு. 

இந்தநிலையில் ராகுல் அளித்த பேட்டியில், "என்னுடைய லிஸ்டில் பஞ்சாப் கடைசியாக தான் இருந்தது. பெங்களூரு அணியில் தான் இருப்பேன் என்று நினைத்தேன். அல்லது வேறொரு அணிக்காக வாங்கப்படுவேன் என்று நினைத்தேன். ஆனால், பஞ்சாப் அணிக்காக வாங்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பஞ்சாப் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளது. அதனால் நான் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை கொடுக்க வேண்டும்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP