பிரதமருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நான் தான் பிரபலம்: ரஷித் கான்

ஐபிஎல் போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பிரதமருக்கு அடுத்து தான் பிரபலம் தான் தான் என பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நான் தான் பிரபலம்: ரஷித் கான்

பிரதமருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நான் தான் பிரபலம்: ரஷித் கான்ஐபிஎல் போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பிரதமருக்கு அடுத்து பிரபலம் தான் தான் என பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 2018ல் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் பந்துவீச்சாளர் ரஷித் கான். இவர் இந்த தொடரில் 21 விக்கெட்களை எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிக்கு பின் உலகம் முழுவதும் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகி உள்ளனர். 

இந்நிலையில் நேற்று சியட் நிறுவனம் மும்பையில் ரேட்டிங் விருதுகளை வழங்கியது. இதில் ரஷித் கானுக்கு இந்தாண்டின் சிறந்த டி20 பவுளருக்கான விருது வழங்கப்பட்டது.

அதன் பின் பேசிய ரஷித் கான், "கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய போட்டிக்கு பிறகு என்னை பற்றி சச்சின் ட்வீட் செய்து இருந்தார். அதை என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பினார். அதனை பார்த்தபோது அதிர்ச்சியடைந்து விட்டேன். பின்னர் 2 மணி நேரம் அதற்கு என்ன ரிப்ளை செய்ய வேண்டும் என்று யோசித்தேன். பின்னர் ரிப்ளை செய்தேன். 

இந்த ஐபிஎல் சீசனில் தோனி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கோலியின் விக்கெட்டை எடுத்தது தான் சிறப்பான ஒன்று. இதுவரையில் நான் எடுத்ததில் சிறந்ததும் கூட. 

இப்போது ஆப்கானிஸ்தானில் பிரதமருக்கு பிறகு நான் தான் பிரபலமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அடுத்த மாதம் எங்களின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறோம். அதுவும் இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ளோம். இந்திய அணிக்கு கடினமான போட்டியாக இருப்போம்" என்று தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP