ஐ.பி.எல் ஃபைனலில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்!

இன்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஹைதராபாத் வீழ்த்தியது.
 | 

ஐ.பி.எல் ஃபைனலில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்!

ஐ.பி.எல் ஃபைனலில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்!இன்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஹைதராபாத் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 174 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து, 175 என்ற கடினமான இலக்கை எதிர்கொள்ள கொல்கத்தா களம் இறங்கியது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் லின்-நரேன் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நரேன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதீஷ் ரானா லின் உடன் சேர்ந்து அதிரடியில் இறங்க கொல்கத்தா அணி முதல் 6 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விக்கெட் விழவே, கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதனால், ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஞாயிற்றுக் கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில், ஹைதராபாத் அணி சென்னையை சந்திக்கிறது.

முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னையிடம் தோல்வி கண்டது ஹைதராபாத். எனவே, இறுதிப் போட்டியில் சென்னையை பழிவாங்க முயற்சிக்கும். இதை சென்னை எப்படி முறியடிக்கப்போறிது என்பதுதான் ஞாயிற்றுக் கிழமை ஆட்டமே... அதுவரை காத்திருப்போம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP