ரஷித் கானை எப்படி எதிர்கொள்ள போகிறார் தோனி?

இன்றைய போட்டியில் ரஷித் கானின் சுழலை தோனி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 | 

ரஷித் கானை எப்படி எதிர்கொள்ள போகிறார் தோனி?

ரஷித் கானை எப்படி எதிர்கொள்ள போகிறார் தோனி?இன்றைய போட்டியில் ரஷித் கானின் சுழலை தோனி எப்படி எதிர்கொள்ள  போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஹைதராபாத் அணி தனது பவுளிங்கால் மற்ற அணிகளை கதிகலங்க வைத்தாலும் சென்னை மட்டும் தொடர்ந்து கெத்துக்காட்டி வருகிறது. சென்னையின் பேட்ஸ்மேன்கள் ஹைதராபாத்தின் பந்துவீச்சை தொடர்ந்து காலி செய்து வருகிறார்கள். கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான 2வது குவாலிபையர் சுற்றில் ஹைதராபாத் என்னதான் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டாலும் பெரிதாக சோபிக்க வில்லை என்று தான் கூறவேண்டும்.

கடைசிக்கட்டத்தில் ரஷித்கானால் தான் அந்த அணி வென்றது. எனவே சென்னை அணிக்கு மிக பெரிய தலைவலி ரஷித் கான். சென்னை அணியை பொறுத்தவரை விதவிதமான பேட்ஸ்மேன்களை கொண்ட அணி.

முதலில் இறங்கும் ஷேன் வாட்சன் தொடங்கி ஷர்துல் தாகுர் வரை பேட்டிங்கில் அதிரடிகாட்டிவிட்டார்கள். கடந்த ஒரு வருடமாக சர்வதேச போட்டிகளில் பேட்டிங்கில் சோபிக்காத தோனி தற்போது படு ஜோரான பார்மில் இருக்கிறார். அவர் இந்த ஆண்டு 455 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தாண்டு 3 முறை ஒற்றை இலக்க ரன்களில் தோனி விக்கெட்டை இழந்துள்ளார். அதில் இரண்டு முறை வான்கடே மைதானத்தில் பறிப்போனவை. இரண்டு முறையும் இளம் வீரர் மாயங்க்அகர்வால் எடுத்தார். அதே போல ஹைதராபாத் அணியின் ரஷித் கான் பவுளிங்கில் தோனி கொஞ்சம் கவனம் செலுத்துகிறார். அவர் பந்துவீசும் போதுமட்டும் விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் பேட்டிங்கை கச்சிதமாக செய்கிறார்

ரஷித் கானை எப்படி எதிர்கொள்ள போகிறார் தோனி?இருந்தும் கடைசியாக இந்த அணிகள் மோதிய போட்டியில் தோனியின் விக்கெட்டை ரஷித் கான் எடுத்த விதம் பலரை ஆச்சர்யப்படுத்தியது. அது எப்படி பந்து இப்படியெல்லாம் சுவிங் ஆகிறது என்று கிரிக்கெட் உலகம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது. விக்கெட்டை பறிக்கொடுத்த தோனி பந்து அப்படி வரும் என்று சிறிதும் எதிர்பார்க்காதது அவரது முகத்திலேயே தெரிந்தது.

எனவே இன்று நடக்கவிருக்கும் போட்டி ரஷித் கான் மற்றும் சென்னை அணிக்கு இடையே நடக்கும் போட்டியாக தான் பலரால் பார்க்க படுகிறது அதிலும் தோனி ரஷித் கானின் மேஜிக் சுழலை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக ஒரு விஷயம் குவாலிபையர் 1ல் ரஷித் தோனியின் விக்கெட்டை தூக்கினார். இதுதான் அவர் தோனியின் விக்கெட்டை முதல் முறையாக எடுப்பது. மில்லியன் டாலர் விக்கெட் அவருக்கு மீண்டும் கிடைக்குமா என்பது கேள்வி குறி தான்.

ஏனென்றால் தோனி, இதுவரை 21 ரஷித் கான் வீசிய பந்தை எதிர்கொண்டுள்ளார். அதில் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். மேலும் ரஷித் பந்துவீச்சில் தோனியின் ஸ்டிரைக் ரேட் 66.67 ஆக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP