சொந்த ஊர் பாசம்... மும்பை வீரருக்கு டிப்ஸ் அளித்த தோனி

மும்பை இண்டியன்ஸ் விக்கெட் கீப்பருக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, விக்கெட் கீப்பிங் பற்றி டிப்ஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

சொந்த ஊர் பாசம்... மும்பை வீரருக்கு டிப்ஸ் அளித்த தோனி

சொந்த ஊர் பாசம்... மும்பை வீரருக்கு டிப்ஸ் அளித்த தோனி

மும்பை இண்டியன்ஸ் விக்கெட் கீப்பருக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, விக்கெட் கீப்பிங் குறித்து டிப்ஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் தோனி, இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கைதேர்ந்தவர். ஐ.பி.எல் போட்டியின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மும்பை அணியுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. சொந்த ஊர் பாசம்... மும்பை வீரருக்கு டிப்ஸ் அளித்த தோனி

இந்த போட்டியில்,  முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில், ஐந்து விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி, 19.4 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் போட்டியின் இடையே மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு கீப்பிங் பற்றிய பல டிப்ஸ்களை சொல்லிகொடுத்துள்ளார், அவரும் தோனியின் அறிவுரையை கேட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இஷான் கிஷானும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த பாசத்தால் இருவரும் இணைந்திருப்பதாக மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்துன் கமெண்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP