ஐ.பி.எல்-க்கு விடுமுறை; ஆஸ்திரேலியா பறந்தார் ஷான் வார்னே

ஐ.பி.எல்-ல் இருந்து 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் ஷான் வார்னே.
 | 

ஐ.பி.எல்-க்கு விடுமுறை; ஆஸ்திரேலியா பறந்தார் ஷான் வார்னே

ஐ.பி.எல்-க்கு விடுமுறை; ஆஸ்திரேலியா பறந்தார் ஷான் வார்னே

ஐ.பி.எல்-ல் இருந்து 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் ஷான் வார்னே.

ஐ.பி.எல் அறிமுக சீசன் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கோப்பையை பெற்று கொடுத்த வார்னே, 11-வது சீசனில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா தொடருக்காக தனது வர்ணனையாளர் பொறுப்பை செய்ய ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளார். இதனால் ஐ.பி.எல் போட்டியில் இருந்து 10 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார். தனது பணி நிறைவடைந்தவுடன் மீண்டும் ஐ.பி.எல்-க்கு திரும்புவார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹெலோ மெல்போர்ன்... இன்னும் 10 நாட்களில் இந்தியாவுக்கு மீண்டும் வருவேன். ஐ.பி.எல்-ல் பங்கேற்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வார்னே வரும் வரை பேட்டிங் பயிற்சியாளர் அமோல் முஸும்தர், பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுட்டுலே, பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக், தலைமை பயிற்சியாளர் ஸுபின் பருச்சா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உதவியாக இருப்பார்கள். 

இதுவரை தான் சந்தித்த மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, அடுத்த போட்டியில் கொல்கத்தா அணியை சந்திக்கிறது. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP