எங்களிடம் தோனி இருக்கிறார்: வெற்றிக்கு காரணம் சொல்லும் ஸ்டீபன் பிளெமிங்

தோனியின் தலைமை பண்பு தான் அணியின் வெற்றிக்கு காரணம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
 | 

எங்களிடம் தோனி இருக்கிறார்: வெற்றிக்கு காரணம் சொல்லும் ஸ்டீபன் பிளெமிங்

எங்களிடம் தோனி இருக்கிறார்: வெற்றிக்கு காரணம் சொல்லும் ஸ்டீபன் பிளெமிங்தோனியின் தலைமை பண்பு தான் அணியின் வெற்றிக்கு காரணம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். 

3வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னை வந்திருந்தனர். அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அவர் கலந்து கொண்டனர். அந்த விருந்து நிகழ்ச்சியில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசினார்.

அப்போது அவர், "சென்னையின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் அணியின் வீரர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி இடம் மாற்றம் என்பது எங்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல. ஒரு ஆட்டத்துடன் சென்னையில் இருந்து போட்டி புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். புனேவின் சூழ்நிலையும் எங்களுக்கு தெரியும். அதற்கு தகுந்தபடி எங்களது ஆட்ட திட்டத்தை மாற்றி செயல்பட்டோம். எங்கள் அணி வீரர்கள் மீது நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

எங்களிடம் தோனி இருக்கிறார்: வெற்றிக்கு காரணம் சொல்லும் ஸ்டீபன் பிளெமிங்ஷேன் வாட்சன் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தார். பிக்பாஷ் போட்டியில் அவரது ஆட்டத்தை கவனித்து தான் அணிக்கு தேர்வு செய்தோம். அவர் எங்களது நம்பிக்கைக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்பட்டார். எங்கள் அணியில் இடம் பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றி கொண்டு நன்றாக ஆடினார்கள்.

சென்னை அணி புள்ளிவிவரங்களால் ஆன அணி அல்ல. ரசிகர்களால் ஆன அணி. மேலும் சென்னையிடம் தோனி இருக்கிறார். அவரின் தாக்கம் ஒவ்வொரு வீரரிடமும் இருக்கும். அனைவராலும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையை தோனி கொடுத்துள்ளார். அவர் வீரர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் தலைமை பண்பு உடையவர்.

அடுத்த ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 12 மாதங்கள் உள்ளது. எங்கள் அணியின் மூத்த வீரர்கள் உடற்தகுதியை பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று பேசினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP