இதயமாற்று அறுவை சிகிச்சை; இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் ஹாக்கி நாயகன்

பாகிஸ்தானின் ஹாக்கி சூப்பர்ஸ்டார் மன்சூர் அஹ்மத், இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார்.
 | 

இதயமாற்று அறுவை சிகிச்சை; இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் ஹாக்கி நாயகன்

இதயமாற்று அறுவை சிகிச்சை; இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் ஹாக்கி நாயகன்

பாகிஸ்தானின் ஹாக்கி சூப்பர்ஸ்டார் மன்சூர் அஹ்மத், இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார். 

49 வயதான மன்சூர் அஹ்மத், பாகிஸ்தான் ஹாக்கி அணியில், 1986 முதல் 2000 வரை ஜொலித்து வந்தார். 1989ம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி இந்திரா காந்தி கோப்பையை பாகிஸ்தான் வெல்ல முக்கிய புள்ளியாக அஹ்மத் இருந்தார். 1994ம் ஆண்டு நெதர்லாந்தை தோற்கடித்து உலக கோப்பையை வென்று கொடுத்த ஹீரோவும் இவர் தான். 338 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அஹ்மத், மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 

தற்போது இவர் இந்திய விசாவிற்காக, இந்திய அரசாங்கத்திடம் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். "4-5 ஆண்டுகளுக்கு முன் பலிவினமாக இருந்த எனது இதயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். ஆனாலும் பிரச்னை முடியவில்லை. கடந்த மாதத்தில் இருந்து என்னுடைய நிலைமை கவலைக்கிடமாக மாறிவிட்டது. இதயமாற்று அறுவை சிகிச்சை தான் இதற்கு ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். 

கராச்சியில் சிகிச்சை பெற்று வரும் எனக்கு, அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் யு.எஸ் மற்றும் இந்தியாவை பரிந்துரைத்து. குறைந்த கட்டணத்தில், அதிக வெற்றியை இந்தியா கொண்டுள்ளது. நான் உங்களிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. இந்தியா எனக்கு உதவி செய்ய ஒத்துழைப்பை கேட்கிறேன். சிகிச்சைக்காக இந்தியா எனக்கு விசா வழங்கி உதவி செய்யும் என்று நம்புகிறேன். 

இரண்டு நாடுகளுக்கு இடையே பிரச்னை இருந்தாலும், பாகிஸ்தான் எனது மருத்துவ விசாவுக்கு ஒப்புதல் வழங்கியது. பஞ்சாப் முதலமைச்சர் என்னுடைய மருத்துவ செலவுக்காக 100,000 டாலர் பணத்தை வழங்கியுள்ளார். மேலும், ஷாஹித் அப்ரிடி  அறக்கட்டளை என்னுடைய மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளது" என்றார்.     

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP