உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியவீரர் 

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்னும் பெருமையை பெறுகிறார்.
 | 

ரஷ்யாவில் நடைபெற்ற 52 கிலோ எடை ஆண்கள் பிரிவின் அரையிறுதிபோட்டியில், சாகேன் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் அமித் பாங்கல் தோற்கடித்தார். இதன் மூலம் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பாங்கல் ஆவார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற  இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடியிடம் தோல்வியை சந்தித்த  அமித் பாங்கல்  வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் குத்து சண்டை போட்டியில்  வெள்ளி பதக்கத்தை வென்ற முதல்  இந்திய வீரர் என்னும் பெருமை பெறுகிறார் அமித் பாங்கல் .

இதற்கு முன்னர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற விஜேந்தர் சிங் (2009), விகாஸ் கிரிஷன் (2011), சிவா தாபா (2015) மற்றும் கௌரவ் பிதுரி (2017) ஆகியோர் வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP