கைல 'கப்' போட வீரமா மீசைய முறுக்கணும்- ஹர்பஜன் ட்வீட்

ஐபிஎல் போட்டி முடியும்போது "தல" கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் என ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
 | 

கைல 'கப்' போட வீரமா மீசைய முறுக்கணும்- ஹர்பஜன் ட்வீட்

கைல 'கப்' போட வீரமா மீசைய முறுக்கணும்- ஹர்பஜன் ட்வீட்

ஐபிஎல் போட்டி முடியும்போது "தல" கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் என ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது. 

பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றில் இரண்டாவது இடத்தை பிடித்தது. நேற்றையப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதைத்தொடர்ந்து முதலில் ஆடிய பஞ்சாப் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ர‌‌ன்‌கள் ம‌ட்டுமே ‌எடுத்தது‌‌‌‌. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 19.1 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

கைல 'கப்' போட வீரமா மீசைய முறுக்கணும்- ஹர்பஜன் ட்வீட்

ஐ.பி.எல் போட்டியின் சென்னை அணி வெற்றிக்கு பிறகு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ட்வீட் செய்து வரும் ஹர்பஜன் சிங், ஒவ்வொரு ஆட்டத்தின் வெற்றிக்குபின்பும், தமிழில் ட்வீட் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் நேற்றைய வெற்றிக்கு பிறகு, ’எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது? அன்பை கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரைக் கொடுத்தாச்சு கப் ஜெயிச்சு பெருமை சேக்கணுங்கற பயம் நிறைய இருக்கு! ஒரே ஒரு ஆசை தான், ஐ.பி.எல் முடியும்போது "தல" கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும்’ என ட்வீட் செய்துள்ளார்.

நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த், தோனியை தல என்று அழைக்கக் கூடாது. தல என்றால் அது அஜித் மட்டும்தான் என்று சொல்லியிருந்தார். அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில்  ஹர்பஜன் சிங் தல என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார். முன்பு, ஐ.பி.எல் போட்டிக்காக விளையாடிய ஶ்ரீசாந்த் கண்ணத்தில் ஓங்வி ஒரு அறைவிட்டவர் ஹர்பஜன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP