ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை படைத்தார் அருணா ரெட்டி!

ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை படைத்த இந்திய வீராங்கனை
 | 

ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை படைத்தார் அருணா ரெட்டி!

ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை படைத்தார் அருணா ரெட்டி!

நடந்து வரும் ஜிம்நாஸ்டிக்ஸ்  உலகக் கோப்பை போட்டியில், இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜிம்நாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் அருணா ஆவார். 

இந்திய வீராங்கனைகள் பிரணதி நாயக் மற்றும் அருணா புத்தா ரெட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று நடந்த வால்ட் பிரிவு போட்டியில், ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்த ஜாஸா கிஸ்லெப் தங்கப் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் எமிலி வைட்ஹெட் வெள்ளி பதக்கமும் வென்றனர். கிஸ்லெப் 13.800 புள்ளகள் பெற, வைட்ஹெட் 13.699 புள்ளிகளும், அருணா 13.649 புள்ளிகளும் பெற்றனர். பிரணதி நாயக் 6வது இடத்தை பிடித்தார். 

சர்வதேச அளவில் ஜிம்நாஸ்டிக்ஸ் விளையாட்டில்  இந்தியா வெல்லும் 3வது பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், காமன் வெல்த் போட்டிகளில், ஆஷிஷ் குமார் மற்றும் திபா கர்மாகர் பதக்கம் வென்றிருந்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP